» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வளர்ச்சித் திட்டங்களில் அரசுக்கு அக்கறை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

வியாழன் 13, ஜூன் 2019 10:30:13 AM (IST)

தமிழக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைபோல் மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் பாஜக பெரிய வெற்றி பெற்றுள்ளது.  மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே மத்திய பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டும், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. அங்குள்ளஅனைத்து அணைகளும் நிரம்பி, தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்படும்போதுதான் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 2021ம் ஆண்டு வரை முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர,மாநில வளர்ச்சித் திட்டம் உள்பட வேறு எதைப்பற்றியும் கவலையில்லை. தமிழகத்தின் நலனுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம், புயல் பாதிப்பு போன்றவற்றில் தமிழகத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியையும் வழங்கவில்லை. தமிழக மக்களை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு தொடர்கிறது என்றார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory