» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு : டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்

வியாழன் 13, ஜூன் 2019 3:57:52 PM (IST)

கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற குரூப் 1 தேர்வி கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 
இந்த தேர்வில் கேட்கப்பட கேள்விகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்தார்.  இந்த வழக்கை இன்று நீதிபதிகள் விசாரித்தனர். இந்த விசாரணையில் குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக இருந்ததாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory