» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் நாளை டெல்லி பயணம்: பிரதமர், அமித்ஷாவுடன் சந்திப்பு

வியாழன் 13, ஜூன் 2019 4:26:46 PM (IST)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. 

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற தமிழக முதல்வர் நாளை மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.  இதனையடுத்து சனிக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இதனை தொடர்ந்து 16-ம் தேதி முதல்வர் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory