» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் : 5 பாடங்களாக குறைக்க திட்டம்!!

வெள்ளி 14, ஜூன் 2019 11:28:51 AM (IST)

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளில் பாடத்திட்டம், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், மதிப்பெண்கள் குறைப்பு, சீருடை என பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு  மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வகுப்புகளில் மொத்தமுள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.  

பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு தனி பாடப்பிரிவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க தேவையில்லை. அவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களைப் படித்தால் போதுமானது. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கணிதப் பாடம் இருக்காது. இந்த மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே படிக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

பாலாJun 14, 2019 - 04:32:04 PM | Posted IP 162.1*****

6 பாடம் ஓகே! 5 கொழப்பமா இருக்கும்!

ஒருவன்Jun 14, 2019 - 12:15:21 PM | Posted IP 108.1*****

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கா விட்டால் எப்படி பொறியியல் படிப்பில் சேருவது என்று யோசித்து படிக்க வேண்டும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory