» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்ரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு: மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

வெள்ளி 14, ஜூன் 2019 4:07:37 PM (IST)

உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த விக்ரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 67. புற்றுநோய் பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி திமுக மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது   

ராதாமணி உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக எம்எல்ஏ ராதாமணி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை சிந்திக்க வைக்கும் வகையில் ராதாமணி பேரவையில் பேசுவார். ராதாமணி மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்று கூறினார். ராதாமணியின் குடும்பத்தினருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். ராதாமணியின் மறைவுக்கு திமுக-வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory