» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வெள்ளி 14, ஜூன் 2019 4:11:57 PM (IST)

தமிழகத்தில் 6,491 காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 

செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (www.tnpsc.gov.in)  இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவுக்குள் வருகின்றன.

இந்த அறிவிப்பாணையில், தேர்வு குறித்த விவரங்களோடு, தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்வாணையத்தில் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படும். பொய்யான வாக்குறுதி வழங்கி தவறான வழியில் வேலை வாங்கி தருவதாகக் கூறும் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

G. DineshJun 26, 2019 - 06:01:28 PM | Posted IP 173.2*****

Teacher

DineshJun 26, 2019 - 06:00:57 PM | Posted IP 173.2*****

Teachear

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory