» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: காதலை முறித்ததால் வாலிபர் வெறிச்செயல்!

சனி 15, ஜூன் 2019 11:19:01 AM (IST)

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலை முறித்ததால் இளம்பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அரிவாளால் வெட்டினான். அரிவாளால் இளம்பெண்ணை வெட்டிய பிறகு ரயில் முன் பாய்ந்து தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். இந்நிலையில், ரயில்வே போலீஸார் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில்,  அந்த இளம்பெண் ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகள் தேன்மொழி(26). பட்டதாரியான இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்தார். சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவரும் சுரேந்தர்(27) என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்ததாக தெரிகிறது. 

இவரும் ஈரோடு மாவட்டம் ரூபின் பாக் பகுதியைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தார்.  இருவரும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கையில் எடுத்து தேன்மொழியை வெட்டியுள்ளார். இதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்தது. உடனே சுரேந்தர் அந்த ரயில் முன் பாய்ந்தார். ஆனால் ரயில் என்ஜின் சற்று முன்னால் சென்றுவிட்டது. 

சுரேந்தர் ரயில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் அவரும் உயிருக்கு போராடினார். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் காதல் ஜோடியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலில் முறிவு ஏற்பட்டது ஏன்? 

தேன்மொழி நேற்று இரவு 10.30 மணி அளவில் கண் விழித்தார். அப்போது அவரிடம் டாக்டர்கள் விசாரித்தனர். டாக்டர்களிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு: நானும் சுரேந்தரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு சாதி குறுக்கே வந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது பெற்றோர் சுரேந்தருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். சுரேந்தரிடம் நான் பேசுவதற்கும் 

தடை விதித்தனர். இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். எங்கள் காதலும் முறிந்துபோனது. இந்த நிலையில் நான் வேலை கிடைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்துவிட்டேன். இதையடுத்து சுரேந்தர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைத்தார். நானும் எனது நிலையை எடுத்துக்கூற சேத்துப்பட்டு ரயில் நிலையம் சென்றேன். இருவரும் அங்கு பேசினோம். எனது நிலையை எடுத்துக்கூறினேன். ஆனால் எனது விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென நான் எதிர்பாராத நிலையில் சுரேந்தர் என்னை அரிவாளால் வெட்டி விட்டார்.இவ்வாறு அவர் கூறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் இதேபோன்று அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

அருண்Jun 17, 2019 - 11:33:23 PM | Posted IP 157.5*****

திருட்டு நாய்கள் எல்லாம் காதல்னு தூக்கிட்டு கெளம்பிடுதுங்க.. நாட்ல பொட்ட புள்ளைய வளக்கிறது ரொம்ப கஷ்டமா போச்சுயா..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory