» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கோவையில் மேலும் ஒருவர் கைது

சனி 15, ஜூன் 2019 11:38:10 AM (IST)

கோவையில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டியதாகவும் ஷேக் ஹிதயதுல்லா என்பவர் கைது செய்யப்பட்டார்.

தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (என்ஐஏ) உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷாகின் ஷா என்ற இப்ராஹிம், ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய  6 பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர். அதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் முகமது அசாருதீன்என்ற இளைஞரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.  

50-க்கும் மேற்பட்ட கோவை மாநகர போலீஸார் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சபிபுல்லா , அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோரது வீடு, கடை மற்றும் அலுவலகங்களில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, 3 பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய கோவையில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டியதாகவும் ஷேக் ஹிதயதுல்லா என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். சிமி (SIMI) எனப்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தோடும் அவர் தொடர்பில் இருந்தது, அவருடைய வீட்டில் இருந்த ஆவணங்களை கண்காணித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory