» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

சனி 15, ஜூன் 2019 3:57:45 PM (IST)

தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்தியே என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான தகவல் தவறானது. சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வந்துள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்ப்பது குறித்து வரும் 17 ம் தேதி முதல் ஆலோசனை நடைபெற உள்ளது. பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால், 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.  பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்தி, தண்ணீர் பிரச்னையை பள்ளிகள் தீர்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory