» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீசாரை நோக்கி கத்தியைச் சுழற்றிய ரவுடி என்கவுன்ட்டரில் பலி: சென்னையில் பரபரப்பு!!

சனி 15, ஜூன் 2019 4:16:46 PM (IST)

சென்னையில் இன்று அதிகாலையில் போலீசாரை நோக்கி கத்தியைச் சுழற்றிய ரவுடி  என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வியாசர்பாடி எம்.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த வல்லரசு மீது கொலை வழக்குகள், குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பவுன்ராஜ் உள்ளிட்ட காவலர்கள் நேற்று (14) வல்லரசு பற்றிய தகவல் கிடைத்து, விசாரிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். நேற்று மாலை போலீசார் சென்றபோது வல்லரசு வீட்டில் அவரும் அவரது கூட்டாளி கதிரும் வீட்டில் இருந்தனர். விசாரிக்கச் சென்ற போலீசாரை கதிர், வல்லரசு ஆகியோர் சேர்ந்து கத்தியால், தாக்க பவுன்ராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 

உடனடியாக அவர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பவுன்ராஜின் தலையில் சுமார் இருபது தையல்கள் போடும் அளவுக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். உடனடியாக போலீசார் எம்.எம். கார்டன் பகுதிக்குச் சென்றனர். அதற்குள் கதிர், வல்லரசு ஆகியோர் தப்பித்துச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த உயரதிகாரிகள் உடனடியாக ஆய்வாளர்கள் மில்லர், ரவி ஆகியோர் தலைமையில் ரவுடி வல்லரசுவைத் தேட உத்தரவிட்டனர். 

இந்தக் குழுவினர் இரவு முழுதும் தேடுதல் வேட்டை நடத்தியதில் வல்லரசு மாதவரம் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இன்று (ஜூன் 15) காலை 4 15 மணிக்கு வல்லரசுவை போலீசார் நெருங்கியபோது அப்போதும் வல்லரசு போலீசாரை நோக்கி கத்தியைச் சுழற்றினார். இந்த தாக்குதலில் இரு உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர். அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் வல்லரசு உயிரிழந்தார் என்று போலீஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். வல்லரசு என்கவுன்ட்டர் பற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory