» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்க வேண்டும் : தமிழிசை செளந்திரராஜன் பேட்டி

ஞாயிறு 16, ஜூன் 2019 12:57:22 PM (IST)தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் பாஜக மாநிலதலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் பாஜக சார்பில் பொதுமருத்துவ முகாம் குலசேகரநல்லுாரில் நடைபெற்றது.முகாமில் பாஜக மாநிலதலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் டாக்டர்கள் செளந்தரராஜன்,சுகநாதன்,ஜெசி உள்ளிட்டோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 200கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் பெரும்பாலானோர்க்கு சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது இங்கு வந்தேன். அப்போது கிராமமக்களில் சிறுநீரக பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாக என்னிடம் கூறினார்கள்.

எனது கணவர் செளந்தரராஜன் சிறுநீரக சிறப்புநிபுணர் என்பதால் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்தோம். இந்த பாதிப்புக்கு காரணம் நிலத்தடிநீரா,வேறு ஏதேனும் பிரச்சனையா என ஆய்வு செய்ய உள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். குலசேகரபட்டணத்தில் இதயநோயால் அதிகம் பேர் பாதிக்கபட்டிருந்தனர். அங்கும் இது போல் முகாம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேர்முக அரசியல் நடத்துவதை விட்டு விட்டு தூத்துக்குடி எம்பி., கனிமொழி போராட்டங்களை நடத்துகிறார். 

மக்கள் உணர்வுகளை புரிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்சனை உள்ளது. ஆகவே கடல்நீரை குடிநீராக்கி அதை வீடு வீடாக விநியோகிக்க வேண்டும். இந்தி மொழியை திணிக்கவில்லை.  ரயில்வே அதிகாரி அறிக்கை விட்டது தவறு.திமுக எந்த விஷயத்திலும் உரிமை கொண்டாட கூடாது. அவர்கள் மக்களை குழப்புகின்றனர். மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், மாநில பொதுகுழு உறுப்பினர் எம்ஆர் கனகராஜ், மாவட்ட பொதுசெயலாளர் சிவராமன், கோட்ட பொறுப்பாளர் ராஜா, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் கிஷோர், ஒன்றிய தலைவர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory