» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்: அமைச்சர்

திங்கள் 17, ஜூன் 2019 12:15:27 PM (IST)

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் என அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற  குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சினையை போல் இந்த குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டும். அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூட்டத்தில்  அமைச்சர் வேலுமணி பேசினார்.  கூட்டம் முடிந்ததும் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் உத்தரவின் பேரில் உள்ளாட்சித்துறை  சார்பாக  ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.  ஒவ்வோரு மண்டலத்திலும் ஓவ்வொரு கண்காணிப்பாளர் போன்றோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அதிகாரிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர்; இதில் உண்மையில்லை. 

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள். சென்னையில்  525  மில்லியன் லிட்டர் தண்ணீர் நவம்பர் மாதம் வரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது சென்னையில் மழை இல்லாவிட்டாலும் கூடுதலாக தண்ணீர் வழங்குகிறோம். பொதுமக்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் விநியோகித்து வருகிறோம். தண்ணீர் பிரச்சினையால் எந்த ஓட்டல்களையும்  மூடவில்லை. ஓட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை  பயன்படுத்த தொடங்கி விட்டனர் குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூறி உள்ளோம். ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது வழக்கமானது தான் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory