» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகள் கடனை அடைக்க சொத்துக்களை எழுதி தர தயார் : பொன்னார் பேட்டி

திங்கள் 17, ஜூன் 2019 1:10:37 PM (IST)

விவசாயிகளின் கடனை அடைக்க எனது சொத்துக்களை எழுதி தர தயார், நீங்கள் தயாரா? என திருநாவுக்கரசருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பாஜக., தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் தக்கலை அருகே முட்டைக்காட்டில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது: 

எம்.பி.க்களின் சொத்தை விற்று விவசாயிகளின் கடனை அடைக்க சொல்லும் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். எனது சொத்துக்களை எழுதி தர நான் தயார். தங்களது சொத்துக்களை எழுதி தர அவரும், அவர்களது கட்சி எம்.பி.க்களும் தயாரா?.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory