» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 1 தேர்வில் தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் : டி.என்.பி.எஸ்.சி பதில் மனு

திங்கள் 17, ஜூன் 2019 5:29:34 PM (IST)

டி.என்.பி.எஸ்.சி  குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கடந்த மார்ச்சில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் இருந்ததாகவும், தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என கடந்த விசாரணையின்போது டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, டிஎன்பிஎஸ்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்வு முடிந்த பிறகு, தேர்வாணயம் வெளியிட்ட மாதிரி விடைத்தாளில், 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் இடம்பெற்றதாக 4,390 புகார் மனுக்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 கேள்விகளில் வினாக்களே தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே, கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.நிபுணர் குழு அறிக்கையை தற்போது வெளியிட முடியாது எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி.யின் பதில் மனு தொடர்பாக, மனுதரார் தங்களின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory