» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

புதன் 19, ஜூன் 2019 12:23:03 PM (IST)

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக 10 மணிக்கு தங்களது அலுவலகங்களில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் பணி நாட்களில் காலை 10 மணிக்கு கண்டிப்பாக தங்களது அலுவலகங்களில் இருக்க வேண்டும். இந்த உத்தரவு அந்தந்த செயலாளர்களின் கீழ் பணியாற்றும் இதர பணியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

அருண்Jun 21, 2019 - 10:48:13 AM | Posted IP 157.5*****

வரலனா என்ன பண்ணுவங்களாம்? மக்கள் report பண்ணலாமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory