» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் விவரங்களை இணையதளத்தில் வெளியிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதன் 19, ஜூன் 2019 5:25:45 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை, மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்திய தேர்தல் ஆணையத்தை போல், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்காளர் பட்டியலை வெளியிட அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்படுவோரின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அமர்வு, இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory