» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயணியை தரக்குறைவாக விமர்சித்த கண்டக்டர், டிரைவரின் லைசென்ஸ் ரத்து!!

புதன் 19, ஜூன் 2019 5:38:29 PM (IST)

தஞ்சை அருகே பயணியிடம் தரக்குறைவாக பேசி விவகாரத்தில் கண்டக்டர், டிரைவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடைக்கு செல்ல பஸ் ஸ்டாண்டு சென்றுள்ளார் சென்னையில் இருந்து சென்ற ஒருவர். பண்டாரவடை வழியாக செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அந்த பயணியிடம் பண்டாரவடையில் பேருந்து நிற்காது என்று பஸ் டிரைவரும், கண்டக்டரும் தெரிவித்தனர். இது தொடர்பாக கண்டக்டருக்கும் - பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இந்த வாக்குவாதத்தை பயணி வீடியோ எடுத்தார். 

இதனை கண்ட பேருந்தின் ஓட்டுநர் எடுத்துக்க.. எடுத்துக்க.. நல்லா எடுத்துக்க.. என்னை எடு.. முதல்ல ஆனா பஸ்ஸ விட்டு முதல்ல கீழே இறங்கு என்று தெரிவித்தார். நான் ஏன் இறங்கணும்.. காசு தந்து தான் டிக்கெட் எடுக்கிறோம் என்று தெரிவிக்க ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. பின்னர் ஓட்டுநர் பயணியிடம் நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.. என்று தெரிவித்தார். இதனையடுத்து அந்த பயணி எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ இறுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணில் பட அந்த ஓட்டுநர், கண்டக்டர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory