» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமித்ஷா கூற்றுபடி தான் தங்கதமிழ்ச்செல்வன் இயங்குகிறார்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கட்டுரை

வியாழன் 27, ஜூன் 2019 11:26:32 AM (IST)

தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது; அமித்ஷா கூற்றுபடி தான் அவர் நடந்து கொள்கிறார் என்று அமமுகவின் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம் முன்வைக்கப்படுள்ளது.

அ.ம.மு.க.வின் முன்னணி நிர்வாகியான தங்க தமிழ் செல்வனுக்கும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   மேலும் தங்க தமிழ்ச்செல்வன், ”அ.தி.மு.க.வில் இணைய சொல்லி யாரும் என்னை அணுகவில்லை. தி.மு.க. உள்பட எந்த கட்சியிலும் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை. நீக்கினாலும் கவலையில்லை. எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரவில்லை. அச்சுறுத்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அரசியலில் இருந்து விலக மாட்டேன்” என்றார்.  

இந்த நிலையில்,  தங்க தமிழ்ச்செல்வனை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அமமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது. நான் யார் ? நீ யார்?  என்ற தலைப்பில் நமது எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தங்க தமிழ்ச்செல்வனை  பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை  முடக்க பாஜகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் திட்டமிட்டுள்ளதாகவும், அமித்ஷா வியூகம் வகுத்து அவர் கூற்றுபடி தான் தங்கதமிழ்ச்செல்வன் இவ்வாறு நடந்து கொள்கிறார்” எனவும் அதில்  கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory