» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை மாற்ற மனமில்லையா? ப.சி., தினகரன் கேள்வி

புதன் 10, ஜூலை 2019 4:54:50 PM (IST)

மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா, மனமில்லையா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. உயிரிழந்த 144 மனிதர்கள் எந்த சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன். மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேட்டு உள்ளார்.

தினகரன் வேதனை

மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினரகன் தெரிவித்துள்ளார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தோரின் எண்ணிக்கையில் தமிழகம் 144 உயிரிழப்புகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். தனிநபர் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். இவ்விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது டுவிட்டரில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது. மனிதக்கழிவுகளை அகற்றும் பணியின் போது தமிழகத்தில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் தருகிறது. மனிதக்கழிவுகளை இனிமேல் மனிதன் அகற்றக் கூடாது என்கிற நிலையை பழனிசாமி அரசு தமிழகத்தில் விரைந்து உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory