» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் மசோதா குறித்த உண்மையை அமைச்சர் சண்முகம் மறைத்துவிட்டார் : மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு

புதன் 10, ஜூலை 2019 4:59:21 PM (IST)

நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட உண்மையை தமிழக சட்டத் துறை சண்முகம் மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தமிழக சட்டசபையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். ஆனால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதாக்களை மத்திய அரசு அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பியதை சட்டத் துறை அமைச்சர் சண்முகம் மறைத்துவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம், நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை; நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தான் தகவல் வந்தது என பதிலளித்தார். 

சட்டசபையில் கூறிய புகாருக்கு சட்டத் துறை அமைச்சர் சண்முகம் கொடுத்த பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் என்று குற்றம்சாட்டினார்.முன்னதாக, நீட் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory