» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது: சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு

வியாழன் 11, ஜூலை 2019 12:38:22 PM (IST)

வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்க அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது. 

ஆனால், வைகோ எம்.பி.யாகக் கூடாது என எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவை போல அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பாவும் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நாளை நேரில் சந்தித்து இது தொடர்பாக ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா ஒரு மனு அளித்துள்ளார். அதில் "தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது" என வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jul 11, 2019 - 02:14:28 PM | Posted IP 108.1*****

தீம்கா எம்பிக்களுடன் இருக்கும் கள்ள உறவுக்கு வைகோ இடைஞ்சலாக இருப்பார் என புஷ்பா பயப்படுகிறார். வேற ஒண்ணும் இல்ல.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory