» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் வரும்... ஆனா வராது... ஸ்டாலின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!

வியாழன் 11, ஜூலை 2019 4:29:34 PM (IST)

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் வரும்... ஆனா  வராது... என சட்டசபையில் ஸ்டாலின் கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழ்நாட்டில் நிச்சயம் மு.க.ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் என தமிழக சட்டசபையில் சேகர் பாபு நேற்று பேசியபோது, அமைச்சர் ஜெயக்குமார் வரும் ஆனா வராது என கூறியபோது சிரிப்பலை ஏற்பட்டது. 

இந்நிலையில், பேரவையில் இன்று அமைச்சர் சம்பத் பேசும்போது "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் தொழில் தொடங்க வரும்" என கூறினார். அமைச்சர் சம்பத் பேச்சை தொடர்ந்து திமுக தலைவர்  ஸ்டாலின் பேசுகையில் "வரும்... ஆனா வராது" என்று கூறினார். இதனால் சட்டசபையில் இன்றும் சிரிப்பலை எழுந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory