» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது: சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

வியாழன் 11, ஜூலை 2019 5:47:51 PM (IST)

போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் கோ.வி.செழியன், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மினி பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார்.அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று எனவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தினாலேயே மினி பஸ் சேவை துவங்கப்பட்டது. எந்த ஜென்மத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது எனக் கூறிய துரைமுருகன், லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பெர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory