» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? சீமான் கேள்வி

செவ்வாய் 16, ஜூலை 2019 10:46:33 AM (IST)

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள். எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது கருத்தை எச் ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் புதிய கல்விக் கொள்கையில் சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது. இது அடிப்படை உரிமையாகும். நான் பல ஆண்டுகளாக பேசுவதைத்தான் சூர்யா பேசியுள்ளார். அவர் பேசியதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும். 

சினிமா துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும் போது சூர்யா தன் மனதில் பட்டதை தைரியமாக கூறியுள்ளார். கல்வி என்பது மானுட உரிமை. அதை நியாயமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். சூர்யா கேட்கும் கேள்விகளில் எத்தனை நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். ஆனால் சமச்சீர் கல்வி முறை என்பது இல்லை. கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது வாய்ப்பில்லை. இது எவ்வாறு சமவாய்ப்பாக அமையும். இதைத்தான் சூர்யா சொல்கிறார். எனவே புதிய கல்விக் கொள்கை என்பதை ஏற்கவே முடியாது என்றார் சீமான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory