» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங். தலைவர் பதவியிலிருந்து கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்: கராத்தே தியாகராஜன் பேட்டி

செவ்வாய் 16, ஜூலை 2019 11:07:01 AM (IST)

"தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி வகிக்கும் பதவிக்கு நான் விரைவில் வருவேன்" என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

காமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் "கருணாநிதியை தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது. கே.எஸ். அழகிரி பொறுப்புக்கு நான் கூடிய விரைவில் வருவேன். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கூடிய விரைவில் நியமிக்கப்படுவேன் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.  

இதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை வேண்டும். தன்மானம் வேண்டும் என்ற கருத்தோடு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும். காங்கிரசிற்கு காலம் காலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசியதற்கு கட்சி விரோத நடவடிக்கையாக அவர் மீது தமிழக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமையின் தவறான தகவலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக திருச்சியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாட்கள்தான் பல்லக்கு தூக்குவது, திமுகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றார். பதிலுக்கு பதில் கூறப்பட்ட கருத்தாக இருந்தாலும் இது கூட்டணிக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory