» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை கடத்திய மர்ம நபர்: சிசிடிவி காட்சி வெளியானது

செவ்வாய் 16, ஜூலை 2019 4:01:30 PM (IST)சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை மர்ம நபர் கடத்தியக் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

ஒடிசாவைச் சேர்ந்தவர் ராம்சிங் (34). இவரது மனைவி  நீலாவதி (29). ஒடிசாவுக்குச் செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் காலையில் ரயில் என்பதால் ரயில் நிலையத்தில் தங்கள் 3 வயது மகனுடன் உறங்கினர். காலையில் கண் விழித்துப் பார்த்த தம்பதிகள் தங்கள் மகன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர்.  உடனடியாக ஸ்டேஷனில் ஆய்வு நடத்திய சென்ட்ரல் ரயில்வே போலீஸார் அங்குள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்த போது குழந்தையை ஒரு நபர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. கையில் சிவப்பு நிறப் பையுடன், நீல நிறக் கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்த நபர், குழந்தை தனியாக சுற்றுவதைப் பார்த்து அங்கும் இங்கும் நோட்டமிட்டு பின்னர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியேறுவது தெரிந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory