» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் விலக்கு மசோதா 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது: மத்திய உள்துறை அமைச்சகம் பதில்

செவ்வாய் 16, ஜூலை 2019 5:24:03 PM (IST)

நீட் விலக்கு மசோதா 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வு இருந்து விலக்கு கோரும் மசோதாவானது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது நீட் விலக்க மசோதாவானது நிராகரிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றும், அதை ஆளும் அதிமுக அரசு மறைத்து விட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை உறுதியாக மறுத்த அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த மசோதா நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது; நிராகரிக்கப்படவில்லை என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதா 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் மத்திய உளத்தூரை செயலர் வைத்யா சார்பில் செவ்வாயன்று பதில்மனு தாக்கல் செயயப்பட்டது. அதில்,2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22ம் தேதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறிய தகவல் உண்மையென்றால் ராஜிநாமா செய்யத் தயார் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory