» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வருகை அத்திவரதரை தரிசனம் செய்தார்!!

செவ்வாய் 16, ஜூலை 2019 5:41:34 PM (IST)திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழியின் அம்மாவுமான ராஜாத்தி அம்மாள்  அத்திவரதரை தரிசனம் செய்தார்.

அத்திவரதர் விழாவால் காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தினந்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசிக்க வந்து கொண்டே இருக்கிறார்கள். சென்ற வாரம் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்திருந்தார். சிறப்பு தரிசனம் செய்த அவர், பச்சை நிற பட்டுபுடவையை சாத்தி அத்திவரதரை தரிசித்து விட்டு சென்றார். இந்நிலையில், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழியின் அம்மாவுமான ராஜாத்தி அம்மாள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தந்தார். 

கருணாநிதியை போலவே கனிமொழியும் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருப்பவர். ஆனால் ராஜாத்தி அம்மாள், தனது மகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றவர். அந்த அளவுக்கு கடவுளை மனதார வேண்டுபவர். இன்று காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தார். வயோதிகம் காரணமாக வீல் சேரில் அவரை குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வந்திருந்தனர். அத்திவரதரைக் காண ஏகப்பட்ட அரசியல் புள்ளிகள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். இதில் தேசியம், திராவிடம் என்று எதுவும் பாரபட்சம் இல்லை. சமீபத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர், மொத்தமாக வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போனார்கள். இப்போது கருணாநிதி குடும்பத்திலிருந்து 2வது முக்கியஸ்தர் வந்து போயுள்ளார். 


மக்கள் கருத்து

சாந்தன்Jul 19, 2019 - 02:07:38 PM | Posted IP 108.1*****

ஹி ஹி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory