» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரேஷன் கடை ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக அதிகரிப்பு... முதலமைச்சர் அறிவிப்பு

சனி 20, ஜூலை 2019 12:23:30 PM (IST)

ரேஷன் கடை ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு, ரூ.50 லட்சம் செலவில் திருச்சியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடை ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதே போல், கூட்டுறவுத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான படி ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அஸ்ஸாம் மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும். தமிழ் பல்கலை கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory