» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: ‍ சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

சனி 20, ஜூலை 2019 12:39:51 PM (IST)

தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம். தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

தஞ்சாவூர் கோவில் போல தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரமாண்டமாக இருக்கிறது. அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது. தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும். கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின்போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory