» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய கல்விக் கொள்கை வந்தால் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் : தமிழிசை பேட்டி

திங்கள் 22, ஜூலை 2019 5:29:51 PM (IST)

புதிய கல்விக் கொள்கை வந்தால் அனைவருக்கும் சமமான கல்வி நிச்சயம் கிடைக்கும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கை வந்தால், சமமான கல்வி அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும். சூர்யா, திருமாவளவன், ரஜினி போன்றோர் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கருத்து தெரிவிக்க இன்னும் இம்மாதம் வரை கால அவகாசம் உள்ளது. அவர்களின் கருத்தை அதில் பதிய வைக்கலாம். ஜனநாயக முறைப்படி அதற்கான அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. 

இப்போது கொடுத்திருப்பது வெறும் வரைவு மட்டும் தான். அதில், எந்தக் கருத்து பிடிக்கவில்லை என்பதைப் பதிவு செய்யலாம். இப்போது எங்கே சமமான கல்வி இருக்கிறது? பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி தானே இருக்கிறது. தமிழகத்தில் செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியே இல்லையா? இப்போது ஏதோ சமமான கல்வி இருப்பது போலவும், புதிய கல்விக் கொள்கை வந்தால் ஏற்றத்தாழ்வு வந்துவிடும் என்பது போன்றும் பேசுகின்றனர். இப்போதுதான் கல்வியில் சமமான நிலை இல்லை. புதிய கல்விக் கொள்கை வந்தால் கல்வியில் சமமான நிலை வரும் என தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory