» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது : பொன்ராதாகிருஷ்ணன் பாராட்டு

திங்கள் 22, ஜூலை 2019 6:43:44 PM (IST)

சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இன்று (22/07/2019)  ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது   மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும் என்று கூறிய நமது இஸ்ரோ தலைவர் திரு. சிவன் அவர்கள், இனி, இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் சல்யூட் செலுத்தவேண்டியது தனது கடமை என்று பேசியிருப்பதை கேட்க்கும் பொழுது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள தக்கது.

சந்திரயான்-2 விண்கலத்தை  விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலால் இந்தியா உலக அரங்கில் நிமிர்த்து நிற்பதுடன், ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory