» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை: கணவர் வெறிச் செயல் - மாணவர்கள் கண்முன்னே பயங்கரம்!

செவ்வாய் 23, ஜூலை 2019 8:46:08 AM (IST)

மதுரையில் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ரதிதேவியை கொலை செய்த கணவர் குருமுனீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியையாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அவரது கணவர் குருமுனீஸ்வரன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று வழக்கம்போல பள்ளிக்கு வந்து ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வகுப்பறைக்குள் நுழைந்த கணவர் குருமுனீஸ்வரன் அவரிடம் வாக்குவாதம் செய்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை கண்மூடித்தனமாக குத்தினார். இதில், ஆசிரியை ரதிதேவி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனை கண்ட மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளியை வீட்டு வெளியேறினர். கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தேடிவந்தனர். இந்நிலையில், மனைவியை கொன்ற கணவர் குருமுனீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory