» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 4:24:13 PM (IST)

அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அத்திவரதர் வழிபாட்டுக்கு வந்த மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி மிரட்டியிருக்கிற காணொளி பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. அத்திவரதர் வழிபாட்டுக்கு வரும் மக்களை நெறிப்படுத்திக் வழிகாட்டுவதும், வருகிறவர்களைச் சோதனையிட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்வதுமெனத் தனக்கு அளிக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசித் திட்டுவதும், எவ்விதத் தவறும் இழைக்காத அக்காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்வேன் என மிரட்டுவதுமானப்போக்கு வன்மையாகக் கண்டனத்திற்குரியது. 

ஏற்கனவே, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என ஏராளமான பணிச்சுமைகளைக் கொண்டிருக்கும் காவல்துறையினர் கூடுதல் பொறுப்பாகவே இத்தகையக் காவல்பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களை மிக மோசமாக நடத்திப் பொதுமக்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல! காவல்துறையினர் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்க முடியாவண்ணம் எந்தளவுக்கு அதிகார அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே மிகச் சிறந்தச் சான்றாகும். இத்தகைய அதிகார வரம்பு மீறல்களையும், பழிவாங்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாகக் களைய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

மண்ணின் நலனுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையினரைப் பணிசெய்ய விடாது தடுத்ததாகக் கூறி பொய் வழக்குத் தொடுக்கும் தமிழக அரசு, காவல்துறையினருக்கு எதிரானக் காஞ்சி மாவட்ட ஆட்சியரின் இச்செயலை அனுமதிப்பது மிக மோசமான நிர்வாகச் சீர்கேட்டுக்கே வழிவகுக்கும். ஆகவே, காவல்துறையினரை மிரட்டிப் பணிசெய்ய விடாது தடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஒரு பையன்Aug 13, 2019 - 12:34:59 PM | Posted IP 162.1*****

அத்தி தரவரை தூக்கி உள்ளே போடுங்க . எல்லாம் சரியாகி விடும் ...

மெய்யன்Aug 13, 2019 - 12:46:35 AM | Posted IP 162.1*****

அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி. நீங்கல்லாம் ஒருமை பேச்சை பற்றி பேசலாமா. சாத்தான் எப்படி பாவேதம் ஓதலாம்

samiAug 12, 2019 - 07:02:41 PM | Posted IP 108.1*****

மாவட்ட நிர்வாக அதிகாரிக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே நினைக்கிறேன்

samiAug 12, 2019 - 07:01:39 PM | Posted IP 108.1*****

இதில் தலையிட நீங்கள் யார் - மேடையிலும் சரி - தொலைகாட்சி விவாதங்களிலும் சரி - பிரதமர் உட்பட எவரையும் ஒருமையில் முகம்சுளிக்கவைக்கும் தமிழில் பேசும் உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்

நிஹாAug 12, 2019 - 06:11:52 PM | Posted IP 162.1*****

தனக்கு தேவையானவர்களை குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுப்பிய காவலர்களை என்ன செய்ய வேண்டும்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory