» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 10:21:01 AM (IST)

அனுமதியின்றி சினிமா மற்றும் டி.வி. தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டி.வி. தொடர்களை, தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாகவும், எனவே அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். பின்னர் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory