» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நூறாவது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது: வைகோ பரபரப்பு பேட்டி

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 11:58:41 AM (IST)

நூறாவது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விமர்சித்துள்ளார். 

மதிமுக சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது. மாநாடு நடைபெறும் இடத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொளுத்தும் வெயிலில் காலணி இல்லாமல்தான் அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்றேன். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்களைத் தூவி கல்லறையை தொட்டு வணங்கினேன். அப்போது நான் உயிர் பிரியும் முன் தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.

நான் காஷ்மீர் பிரச்னையில் 30 சதவீதம் காங்கிரசையும், 70 சதவீதம் பாஜகவையும் தாக்கி பேசி இருக்கிறேன். இந்தியா தனது 100 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள் என்று கூறினார்.  அப்போது செய்தியாளர்கள் வைகோவிடம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உங்களை எட்டப்பன் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, வைகோ பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார். 


மக்கள் கருத்து

வாசுAug 18, 2019 - 09:22:59 PM | Posted IP 173.2*****

இப்படி சொல்லிவிட்டு எவனாவது கேட்டால் நான் அப்படி சொல்லவேயில்லை என்று புலம்பவேண்டியது

சாமிAug 17, 2019 - 06:24:58 PM | Posted IP 108.1*****

இந்த மாதிரி கருத்து தெரிவிக்கும் இந்த நச்சுக்கிருமியை - ஏன் நீதிமன்றங்கள் கண்டுகொள்வதில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory