» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடிசை மாற்றுவாரிய திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

புதன் 14, ஆகஸ்ட் 2019 3:39:41 PM (IST)

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த திட்டத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 4710 வீடுகளை கட்டும் திட்டத்தை எதிர்த்து மலைவாழ் மக்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மனுவில், நிலச்சரிவு மற்றும் வனவிலங்குகள் அபாயம் உள்ள பகுதிகளில் வீடுகள் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெள்ளியங்கிரி மலை அடிவாரம் என்பது யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்று வனத்துறை கூறியிருந்த நிலையில், குடிசை மாற்று வாரியத்தின் திட்டத்துக்கு தடை விதித்ததோடு, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்காதவரை, மேற்கொண்டு கட்டடப் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory