» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்திய மருத்துவ சங்கம்: தலைவராக ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தேர்வு
புதன் 14, ஆகஸ்ட் 2019 5:40:48 PM (IST)

மேல்மருவத்தூரில் இந்திய மருத்துவ சங்கம் கிளை துவங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூரில் இந்திய மருத்துவ சங்கம் கிளை துவக்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் மூன்றரை லட்சம் மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, தமிழகமெங்கும் 160க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது இந்திய மருத்துவ சங்கம். மருத்துவ சேவை முன்னேற்றம், மருத்துவர்கள் பாதுகாப்பு, மருத்துவக்கல்வி பணிகள் மற்றும் பல்வேறு மக்கள் நல சேவைகளை செய்து வரும் இந்திய மருத்துவ சங்கத்தின் 162 கிளை நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
மருத்துவர் சங்க மாநில தலைவர் டாக்டர் கனகசபாபதி தலைமையில், மாநில செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் முன்னிலையில், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் டி.ரமேஷ் வரவேற்புரையுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் டி.ரமேஷ் ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் பிரசாத் செயலாளராகவும், எலும்பு மூட்டு இயல் துறை தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கனகசபாபதி , மாநிலச் செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து இந்திய மருத்துவ சங்கத்தின் சேவைகளையும் சங்கத்தின் மூலமாக செய்ய வேண்டிய பணிகளையும் விளக்கி உரையாற்றினார். எலும்பு மூட்டு இயல் துறைத்தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ் நன்றியுரை வழங்கினார்.
மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில அளவிலான முன்னாள் தலைவர்கள் டாக்டர் முத்துராஜன் டாக்டர் ரவி சங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் ஆதிபராசக்தி மருத்துவமனை இப்பகுதி மக்களுக்கு செய்து வரும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை பாராட்டி இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து ஆதிபராசக்தி மருத்துவமனை இன்னும் பல்வேறு சாதனைகளையும் மக்கள் சேவைகளையும் செய்ய முடியும் என்று நம்புவதாக தெரிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி மருத்துவமனை தலைமை அதிகாரிகள் சீனிவாசன் சந்திரசேகர் தலைமையில் பணியாளர்கள் குழு சிறப்பாக செய்திருந்தது.
மக்கள் கருத்து
Chandra sakthiAug 15, 2019 - 03:07:31 PM | Posted IP 162.1*****
Oksakthi ammavin blessings for our long life and future
சக்தி ராஜாராம்Aug 14, 2019 - 08:27:57 PM | Posted IP 108.1*****
வாழ்த்துக்கள் ரமேஷ் சார்.
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை: கமல்ஹாசன் கண்டனம்
புதன் 11, டிசம்பர் 2019 5:08:06 PM (IST)

கீழடி முதல் மூன்று கட்ட அகழாய்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ராமதாஸ் கேள்வி!
புதன் 11, டிசம்பர் 2019 4:55:06 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் ரஜினி-கமலுடன் அமமுக கூட்டணி வருமா? டிடிவி தினகரன் பதில்
புதன் 11, டிசம்பர் 2019 4:14:45 PM (IST)

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
புதன் 11, டிசம்பர் 2019 3:21:14 PM (IST)

அரசுப் பணியாளர்கள் தேர்வில் வெளிப்படையான மோசடி: வைகோ குற்றச்சாட்டு
புதன் 11, டிசம்பர் 2019 12:14:11 PM (IST)

ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.25 லட்சத்திற்கு ஏலமா? அதிகாரிகள் நேரில் விசாரணை
புதன் 11, டிசம்பர் 2019 8:55:43 AM (IST)

Chandra sakthiAug 15, 2019 - 03:10:50 PM | Posted IP 162.1*****