» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி, மோடிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை: தூத்துக்குடியில் தா.பாண்டியன் பேட்டி

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 10:23:54 AM (IST)

"பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலையில்லை"  என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தா.பாண்டியன் குற்றம்சாட்டினார். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 3 நாள் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாலையில், தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தூத்துக்குடியில் நடைபெற்று வரும்  மாநில மாநாட்டில் தேசிய அளவிலான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளார். 

நாட்டின் மதசார்பின்மை, மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதற்கு கடுகளவு கூட கவலைப்படாமல் எடப்பாடி அரசு துணையாக நிற்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலேயே எடப்பாடி பழனிசாமி குறியாக உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை பற்றி எடப்பாடி அரசு எந்தவித கருத்தும் கூறாமல் மெளனமாக உள்ளது. இந்த மெளனம் சம்மதத்தின் அறிகுறியாகத் தெரிகிறது. நீட்தேர்வு குறித்து சிறப்பு கூட்டம் கூட்ட மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. சேலம் உருக்காலை உட்பட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் போராடி பெற்ற இந்த சேலம் உருக்காலை என்று அவர் தெரிவித்தார்.  


மக்கள் கருத்து

samiAug 18, 2019 - 04:42:59 PM | Posted IP 162.1*****

போர் என்று வந்தால் சீனாவின் பக்கமே நிற்போம் என்று சொன்ன புண்ணியவாளன்

சாமிAug 17, 2019 - 06:18:06 PM | Posted IP 162.1*****

சேலம் உருக்காலைக்கும் திராவிட தலைவர்களுக்கும் எள் முனை அளவுகூட சம்பந்தம் கிடையாது - அது முழுக்க முழுக்க மேன்மைமிகு முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர் வெங்கடராமன் அவர்களையே சாரும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory