» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 10:33:33 AM (IST)

தமிழகத்தில் அடுத்த நாளையும், நாளை மறுதினமும் 2 நாட்களுக்கு  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுதவிர, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (நாளையும், நாளை மறுதினமும்) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கில் இருந்து வீசிய காற்றினால் கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு ஓரளவு மழை இருந்தது. தற்போது அந்த காற்று குறைந்துவிட்ட நிலையில், வருகிற 17-ந் தேதி முதல் கிழக்கில் இருந்து காற்று அதிகம் வீச இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 17 (நாளை) மற்றும் 18-ந் தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory