» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி : உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 12:16:44 PM (IST)

அத்திவரதர் வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்றுடன் 47 நாட்களாக அத்திவரதர் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அத்திவரத பெருமாளை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 46 நாட்களில் சுமார் 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அத்திவரதரை இன்று ஒருநாள் மட்டுமே காண முடியும் என்பதால், அத்திவரதரை பலரும் காணவேண்டும் என்பதற்காக அத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்கக் கோரி புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மரபு, வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆகம விதிப்படி 48 நாட்களில் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்டுவது தான் மரபு என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory