» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாததால் செல்போன் பறிப்பு : கல்லூரி மணாவி, நண்பருடன் கைது

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 3:54:53 PM (IST)"காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாததால் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக" என்று சென்னையில் ஆண் நண்பருடன் சிக்கிய கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை வன்னிய தேனாம்பேட்டையை சேர்ந்தவர் பிரசன்னா லிப்சா (32). இவர் சென்னை நுங்கம்பாக் கத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 12-ந் தேதி அன்று இரவு 7 மணி அளவில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரோகிணி என்பவருடன் தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பிரசன்னா லிப்சா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். மோட்டார் சைக்கிளின் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பிரசன்னா லிப்சா தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில், தேனாம்பேட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு பொன்னுவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.செல்போன் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதை அடிப்படையாக வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த வாலிபரையும், மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து சென்ற இளம்பெண்ணையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

செல்போனை பறித்துச் சென்ற வாலிபரின் பெயர் ராஜூ (29) சூளைமேட்டை சேர்ந்தவர். இவர் கையில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார். பின்னால் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணின் பெயர் சுவாதி (20). கரூரை சேர்ந்த இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜூவும், சுவாதியும் காதலித்து வந்துள்ளனர். சுவாதி கல்லூரிக்கு பீஸ் கட்ட பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராஜூ மீது ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு வடபழனி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும், 2 செல்போன்களும் மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிளை வேளச்சேரி பகுதியில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

அருண்Aug 17, 2019 - 09:12:39 PM | Posted IP 157.5*****

என்ன வேணா சொல்லிக்குங்க. நான் சொல்லுறது 100% உண்மை

ஒருவன்Aug 17, 2019 - 09:03:08 PM | Posted IP 162.1*****

வடை நாட்டவன் எல்லாம் முட்டா பீஸ் தான்

அருண் அவர்க்குAug 17, 2019 - 05:38:47 PM | Posted IP 173.2*****

அது உங்க ஊரு சென்னை லயா ?? முட்டாபீசுகள் வாழும் உங்க ஊரா? எங்க ஊரு பெண்கள் ஒழுக்கமாக வாழ்கிறார்கள் ...

அருண்Aug 17, 2019 - 10:42:44 AM | Posted IP 192.8*****

பருவ வயது பெண்கள் எப்போதும் முட்டா பீசுகள் தான்

இவன்Aug 17, 2019 - 10:39:00 AM | Posted IP 162.1*****

சென்னையில் சில மாணவர்களின் கலாசாரம் சீரழிந்து கொண்டே போகிறது ...

நிஹாAug 16, 2019 - 04:09:06 PM | Posted IP 108.1*****

பீஸ் கட்ட வீட்டில் வாங்கிய பணம் எங்கே போனது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory