» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலூர் 3 மாவட்டங்களாகப் பிரிப்பு: முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 4:46:30 PM (IST)

வேலூர் மாவட்டம் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

வேலூர் மாவட்ட மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு எங்களது பாராட்டுகள். அதேபோல நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரித்து, இத்தொகுதி மக்களின் 28 ஆண்டு கால கோரிக்கையை கவனத்தில் கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory