» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பாஜகவுக்கு டிச. 15-க்குள் புதிய தலைவர் தேர்வு : இல.கணேசன் தகவல்

சனி 17, ஆகஸ்ட் 2019 10:08:13 AM (IST)

டிசம்பர் மாதம் 15-ம் தேதிக் குள் தமிழக பாஜக.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தலை நடத்தி முடித்து, இந்த ஆண்டுக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தமிழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். 

இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் வெற்றி பெறுவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவருவோம் என உறுதி எடுத்தோம். அதன்படி தற்போது ஊழலை ஒழித்துவிட்டோம். தற்போது ஊழல்வாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். நாங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவோம் என்றார்.


மக்கள் கருத்து

balaAug 17, 2019 - 11:20:29 AM | Posted IP 173.2*****

அய்யயோ அப்போ எங்க அக்கா டுமிலியாஸை நிலைமை....அவ்வ்வ்வ்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory