» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்கள் ஜாதி, மத அடையாளங்களுடன் கயிறு கட்டி வந்தால் நடவடிக்கை: கே.ஏ.செங்கோட்டையன்

சனி 17, ஆகஸ்ட் 2019 10:23:06 AM (IST)

பள்ளிக்கு ஜாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் கயிறு கட்டி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் கே.செங்கோட்டையன் நேற்று திறந்துவிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரசுப் பள்ளிக் குழந்தைகளிடத்தில் மத அடையாளம் எதுவும் இல்லை.  

பள்ளிக்கு ஜாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் கயிறு கட்டி வருவதில்லை. பள்ளியில் அதுமாதிரி நடைபெறுவதாக என் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மத அடையாளம் தொடர்பாக எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதுதான் குழப்பத்துக்கு காரணம். பத்திரிகைகள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.  நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளி வகுப்புகள் தற்காலிகமாக வீடுகளில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து சீரமைக்கப்படும். இதற்கான ஆய்வுக்கூட்டம்  நீலகிரியில் நடந்துள்ளது என்றார்.

இதையடுத்து, கோபிசெட்டிபாளையம் அருகே மூணாம்பள்ளி கிராமத்தில் குடிமராமத்துப் பணிகளைத் தொடக்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையிலிருந்து முன்னதாகவே பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவையான விதை நெல்கள், உரங்கள், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  தேவையானதை விவசாயிகள் உடனே பெற்றுக் கொள்ளலாம். பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள்,  அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என உத்தரவு வழங்கியுள்ளோமே தவிர இருசக்கர வாகனங்களில் வரவேகூடாது என அறிவிக்கவில்லை என்றார்.


மக்கள் கருத்து

சாமிApr 26, 1566 - 05:30:00 AM | Posted IP 108.1*****

சரியான நடவடிக்கை

xxxxAug 17, 2019 - 02:33:03 PM | Posted IP 108.1*****

ஸ்கூல் அப்ப்ளிகேஷன்ல அப்பறோம் எதுக்கு ஜாதி மதம் கேக்கறீங்க சில பிரைவேட் ஸ்கூல் பெயர் மாற்றப்படவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory