» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதர் தரிசனம்: நளினி கோரிக்கை நிராகரிப்பு

சனி 17, ஆகஸ்ட் 2019 12:36:33 PM (IST)

மகள் திருமணத்துக்காக அத்திவரதரை தரிசனம் செய்ய நளினி விடுத்த கோரிக்கையை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நிராகரித்தார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி ஆகியோரின் மகள் ஹரித்ராவின் திருமணத்துக்காக நளினி ஒரு மாதகாலம் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் தங்கியுள்ள நளினி, அங்கிருந்து தினமும் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் அத்திவரதரைத் தரிசிக்கும் வகையில் தன்னை காஞ்சிபுரம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி, வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் கடந்த 14-ஆம் தேதி மனு அளித்தார். 

அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நான், ஒரு மாதகால பரோலில் சத்துவாச்சாரியில் தங்கியுள்ளேன். காஞ்சிபுரம் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் அளிப்பவர். பல லட்சம் மக்கள் அவரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்பம் ஒன்று சேரவும், எனது மகளின் திருமணம் இனிதே நிறைவடையவும், எங்களது விடுதலைக்காக பிரார்த்திக்கவும் அத்திவரதரை தரிசிக்க எண்ணுகிறேன். அதற்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த மனுவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நிராகரித்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory