» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனல்மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு : நாசா அறிக்கையால் அதிர்ச்சி

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 6:55:29 PM (IST)சல்ஃபர் டை ஆக்சைட் வாயுவை அதிகம் வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது என அமெரிக்காவின் நாசா செயற்கைகோள் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதில் சல்ஃபர் டை ஆக்சைட் வாயுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தொழிற்சாலைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த வாயுவை வெளியிட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் சல்ஃபர் டை ஆக்சைட் வாயுவை அதிகம் வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது என அமெரிக்காவின் நாசா செயற்கைகோள் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  நிலக்கரியை அதிக அளவில் எரிப்பது, அளவுக்கு அதிகமான அனல் மின் நிலையங்களின் பயன்பாடு, எரிபொருள்களை முறையாக டீ-சல்ஃப்ரைசேசன் செய்யாதது போன்ற காரணங்களால் இந்தியா இந்த பட்டியில் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அதிக அளவு காற்று மாசடைகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சிங்கரௌலி, நெய்வேலி, ஜர்சுகுடா, கோர்பா, கட்ச், சென்னை, ராமகுண்டம், சந்திரபூர், கொரடி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் அனல் மின் நிலையங்கள் தான் அதிக அளவில் சல்ஃபர் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சவுதி, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனல் மின்நிலையங்களால் சல்ஃபர் டை ஆக்ஸ்டின் நச்சுக் கலப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, துருக்கி போன்ற நாடுகளில் இவ்வாயுவின் வெளியீடு அதிகம் இல்லையென்றாலும், இருக்கின்ற நச்சுத் தன்மையை குறைக்க புதிய நடவடிக்கைகள் எதையும் அந்நாடுகள் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்த வாயுக்களை அதிக அளவு வெளியிட்டாலும், அதனை கட்டுப்படுத்த அதிக அளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறது. அமெரிக்கா தாங்கள் பெறும் மின்சாரத்தை சுத்தமான முறையில், இயற்கைக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. சீனாவோ, அனல் மின்நிலையங்கள் வெளியிடும் சல்ஃபர் டை ஆக்ஸ்டைடின் அளவை கட்டுப்படுத்த புதிய கருவிகளை பொருத்தியுள்ளது. இவ்வாறு நாசா அமைப்பு தங்கள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

மக்கா!Aug 20, 2019 - 11:57:54 PM | Posted IP 162.1*****

ஏண்டா!! அப்போ....நீ தான் அவனா....போராளிங்க சொன்னவன் இல்லியா? நாசமா போங்கடா!!!

ராஜாAug 20, 2019 - 07:12:53 PM | Posted IP 162.1*****

அடப்பாவிகளா தெர்மல் பிளாண்டு இவ்வளவு புகையை விடுறானுங்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory