» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்: ப.சிதம்பரம் விவகாரம் குறித்து பிரேமலதா கருத்து

புதன் 21, ஆகஸ்ட் 2019 1:58:03 PM (IST)

உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விவகாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது; அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலாக்கத் துறை சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் எனப்படும் தேடப்படும் நபர் என்ற நோட்டீஸை பிறப்பித்துள்ளது. 

இதனிடையே, ப.சிதம்பரம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்; ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும்.நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றார். 


மக்கள் கருத்து

முருகன்Aug 22, 2019 - 10:58:12 AM | Posted IP 162.1*****

சொந்த கட்சியை தோற்கடிக்க இந்த வாய் போதுமானது ..

ராமநாதபூபதிAug 21, 2019 - 02:23:06 PM | Posted IP 162.1*****

இப்போ உன் புருசனோட கட்சி சீரழியுதே இது யார் தின்ன உப்பு பிரேமலதா??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory