» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 24, ஆகஸ்ட் 2019 11:48:23 AM (IST)

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து, தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,வேளாங்கண்ணி மாதா கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து  ஆக. 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம்  7  ஆம் தேதி ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் நாகர்கோவிலிலிருந்து மதியம் 12.55  மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 1,  8   ஆம் தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை  10.45  மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். 

இந்த சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 12 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் சாதாரண இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory