» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சனி 24, ஆகஸ்ட் 2019 1:08:28 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில்  சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே திற்பரப்பு அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரியில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால் அருவியில் கணிசமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.

விடுமுறையை அனுபவிப்பதற்கு ஏற்றாற்போல் சூழல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வெளியூரில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி உள்ளூரில் இருந்தும் ஏராளமானோர் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory